‘அஜாங்கோ குஜாங்கோ, டஜாக்கோ முஜாக்கோ, டாங்கு டக்குற சிகாகோ’ மாதிரி தலையைப் பிய்த்துக்கொள்கிற பாடல்வரிகள்தான் இன்றைக்கு அஜீத், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு பாடல் எழுதுகிற கவிஞர்களின் லிரிக்குகள்.

ஏற்கனவே இப்படி ‘ஆலுமா டோலுமா’பாடல் மூலம் சாகித்ய அகாடமி விருது சம்பாதித்த அஜீத்தின் படத்துக்கு அடுத்தபடியாக ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சித் தூக்கு’ படலில் இடம்பெற்றுள்ள...

டானே- டர்ராவான், தௌலத்தே – கிர்ராவான்

வந்தேன்டா மதுரைக்காரனா .. என்ற வரிகள் ரசிகர்கள் பெரும் புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளன. பாடலை எழுதியிருப்பவர் விவேகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் விவேகா.

’விஸ்வாசம்’ படத்தின் மொத்தக்கதையும் மதுரை அருகே உள்ள கிராமத்தில் நடப்பதாகக் கூறப்படும் நிலையில் இதுவரை தங்கள் வாழ்நாளிலேயே கேள்விப்படாத மேற்படி கவிதை வரிகளைக் கேட்டு மொத்த மதுரை மாவட்டமும், சங்கீதத்தில் அல்ல, நடுக்கத்தில் ஆடிப்போயுள்ளது.

பாடல் ரிலீஸான முதல் நாளிலேயே 20 லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற வயித்தெரிச்சலில், பாடலைக் கலாய்க்க வாய்ப்பு தேடிவந்த விஜய் ரசிகர்களுக்கு இந்தப் பிழை பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரு ஹீரோ இதைக் கூடவா கவனிக்கமாட்டார்? தல இருக்கு. ஆனா அதுல மூளை எங்கய்யா இருக்கு? என்று கலாய்த்துவருகிறார்கள்...