Back to cricket star contest - treasurer Karthi announces ...

ஜனவரியில் மீண்டும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக் குழுவில் பொருளாளர் கார்த்தி தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைப்பெற்றது. இதில், தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் என்று பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

இதனையடுத்து, பொருளாளர் கார்த்தி, “வரும் ஜனவரி மாதத்தில் கடந்தாண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி மீண்டும் நடத்தப்படும். இதற்காக கமல் மற்றும் ரஜினியிடமும் நாங்கள் ஒப்புதலும் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்தார்.