babhubali movie rajinikanth watch theater
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'படையப்பா' படத்தில் அனைவர் மனதிலும், நீலாம்பரியாக நிலைத்த ரம்யா கிருஷ்ணன், 'பாகுபலி' படம் மூலம் ராஜ மாதா சிவகாமி அன்னையாக வாழ்ந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து பல பிரபலங்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
அதே போல இந்த திரைப்படம், உலகில் பல இடங்களில் வெளியாகி மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. படத்திற்கு இன்றும் பல இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தை வீட்டில் பார்த்துவிட்டு ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களோடு கூட்டத்தில் பார்க்கவேண்டும் என விரும்பி தியேட்டரில் இப்படத்தை மாறுவேடத்தில் சென்று மீண்டும் பார்த்தாராம்.
அங்கிருந்தவர்கள் பலருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லையாம். இந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்துள்ளது.
