விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Bakkiyalakshmi Serial Today Episode
விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த இந்த சீரியலில் தற்போதைய கதைப்படி ஈஸ்வரி கோபியையும், பாக்கியாவையும் மீண்டும் இணைந்து வாழுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் அதற்கு இருவரும் சம்மதிக்க மறுக்கின்றனர். எனவே கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகாவை சந்தித்து ஈஸ்வரி பேசுகிறார். ஈஸ்வரிக்கு சரியான பதிலடி கொடுத்து ராதிகா திருப்பி அனுப்பி விடுகிறார். இன்றைய எபிசோடில் என்ன நடந்தது? ராதிகா ஈஸ்வரிக்கு என்ன பதில் கூறினார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஹோட்டலுக்கு ராதிகாவை வரச் சொல்லி தனியே சந்தித்துப் பேசுகிறார் ஈஸ்வரி. ராதிகாவிடம் பேசும் அவர், உன்ன நிறைய திட்டி இருக்கேன், நிறைய தப்பா பேசியிருக்கேன் என்னை மன்னித்துவிடு என்று கூறுகிறார். அதற்கு பதில் அளித்த ராதிகா நான் அதையெல்லாம் யோசிப்பதே இல்லை என்று கூற, அது உன்னுடைய பெருந்தன்மை. நீ என் இடத்திலிருந்து யோசித்துப் பார். வீட்டில் இனியா இருந்தாள். மகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய நேரத்தில் கோபி திருமணம் செய்து கொண்டு வந்தால் இனியா நிலைமை என்ன ஆகும் என்று ஈஸ்வரி கேட்கிறார். அதற்கு ராதிகா அதையெல்லாம் விடுங்கள் அதுதான் இனியாவுக்கு திருமணமாகிவிட்டதே என்று கூறுகிறார்.
இனியாவுக்கு திருமணம் ஆன செய்தி தெரியுமா என்று ஈஸ்வரி கேட்க, பாக்யா கூறியதாக ராதிகா சொல்கிறார். ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்று ஈஸ்வரி கேட்க, என்னால் வர முடியாத சூழ்நிலை இருந்ததாக ராதிகா பதிலளிக்கிறார். எழில் அமிர்தாவையும் நிலாவையும் கூட்டிக்கொண்டு கோவாவிற்கு ஷூட்டிங் எடுக்க போயிருப்பதாக பாக்யா தன்னிடம் கூறியதாக ராதிகா கூறிக் கொண்டிருக்கிறார். சரி நான் விஷயத்துக்கு வரேன் என்று பேச தொடங்கும் ஈஸ்வரி, என் பையன நெனச்சு எனக்கு கவலையாக இருக்கு. அவன் இப்போது தனியா வேறு வீட்டில் தங்கி இருக்கான். என்னை பார்க்க தினமும் பாக்யா வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கான். அவனுக்கு பேச்சுத் துணைக்கு யாருமே இல்லை என்று மகன் பற்றிய கவலைகளை கூறத் தொடங்குகிறார்.
பிள்ளைகள் தான் கோபியின் உலகமாக இருந்தார்கள். ஆனால் இப்போது பிள்ளைகளுக்கு கோபியிடம் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரமில்லை. அனைவருக்கும் வேலை, குடும்பம் என ஆகிவிட்டது. கோபி இப்போது தனியாக இருக்கிறான் என்று கூற பாக்யாவும் தானே தனியாக இருக்கிறார்கள் என்று ராதிகா பதிலுக்கு கேள்வி கேட்கிறார். பெண்கள் மாதிரி ஆண்கள் கிடையாது. நாம் பிள்ளைகளுடன் சிரித்துப், பேசி வேலை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம். ஆனால் ஆண்களால் தனியாகவே இருக்க முடியாது. நான் ஒன்று கேட்டால் தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டியே? நீயும், கோபியும் சேர்ந்து இருந்ததை நான் தப்பாக நினைத்து இருக்கேன். நீ கோபியை விட்டு விலகிப் போக வேண்டும் என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் இப்போது நீயும் மயூவும் தனியாகத் தானே வாழ்கிறீர்கள்.
மயூ என்றால் கோபிக்கு மிகவும் பிடிக்கும். நீயும் கோபியும் ஏன் மறுபடியும் இணைந்து வாழக்கூடாது என்று ஈஸ்வரி கேட்கிறார். ஈஸ்வரியின் இந்த பேச்சை சற்றும் எதிர்பார்க்காத ராதிகா அதிர்ச்சியில் உறைகிறார். எனக்கு என் மகனை நினைத்தால் பயமாக இருக்கிறது யாருமே இல்லாமல் தனி ஆளாக ஆகி விடுவானோ என்று கவலையாக இருக்கிறது
நீங்க ரெண்டு பேரும் மனசு மாறி ஏன் சேர்ந்து இருக்கக் கூடாது? நீ உடனே கூட சொல்ல வேண்டும் என்று இல்லை. யோசித்து நிதானமாக சொல்கிறாயா என்று ஈஸ்வரி கேட்கிறார். அதற்கு ராதிகா இதில் யோசிப்பதற்கு எதுவுமே கிடையாது. இப்போதுதான் என் வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கிறது. எக்காரணத்தை கொண்டும் நான் அதை இழக்க விரும்பவில்லை என்று ஈஸ்வரியின் முகத்தில் அறைந்தார் போல் பதிலடி கொடுக்கிறார்.
கோபியுடன் வாழ்ந்தால் எனது நிம்மதியும் சந்தோஷமும் கண்டிப்பாக போய்விடும். பிரச்சனைகள் மட்டுமே இருந்த கடந்த காலத்திற்குள் நான் மீண்டும் நுழைய விரும்பவில்லை என்று ராதிகா கூற, கடந்த காலத்தில் பிரச்சனையாக நான் தானே இருந்தேன். நான் இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என ஈஸ்வரி கூறுகிறார். எனக்கு விருப்பமே இல்லாத விஷயத்தை பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இதில் யோசிப்பதற்கு இனி எதுவுமே இல்லை. உங்க பையனுக்காக நீங்கள் யோசிக்கலாம். ஆனால் நான் எதற்கு யோசிக்க வேண்டும்? நான் ரொம்ப பொறுமையாக பேசிக் கொண்டிருக்கிறேன் என்னை கடுமையாக பேச வைத்து விடாதீர்கள் என்று ஈஸ்வரியை ராதிகா நோஸ்கட் செய்து அனுப்பி விடுகிறார்.
பின்னர் ஹோட்டலுக்கு வரும் கோபியிடம் பேசும் ராதிகா, உங்கள் அம்மா உங்களையும், என்னையும் மீண்டும் இணைந்து வாழுமாறு அறிவுறுத்துகிறார். இது எதுவுமே உங்களுக்கு தெரியாதா? என்னை விவாகரத்து செய்த பின் உங்களுக்கும், பாக்யாவுக்கும் திருமணம் செய்து வைப்பேன் என்று கூறினார். அதெல்லாம் நடக்கவில்லையா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் கோபி, “இது என் அம்மாவின் ஆசை மட்டுமே. அவரது ஆசை எல்லாம் நிறைவேற வேண்டுமென்று சட்டம் எதுவும் இல்லையே? அதெல்லாம் ஒன்றும் நடக்காது” என்று கூறுகிறார். உங்களையும் பாக்யாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று உங்கள் தயார் நினைத்தார். அது நடக்கவில்லை என்றவுடன் உங்களை என் தலையில் கட்ட நினைக்கிறாரா? என்று ராதிகா கோபத்துடன் கேட்கிறார். அதற்கு கோபி, அம்மா நினைப்பது போல் என் மனதில் எதுவுமே இல்லை உன்னுடனோ பாக்யாவுடனோ மீண்டும் இணைந்து வாழும் எண்ணம் தனக்கில்லை என்று கூறுகிறார்.
ஈஸ்வரியைப் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் பையனை நினைத்து பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. அவர்கள் என்னை தேடி வந்து பேசுவதை பார்த்தால் அவர்கள் மனதிற்குள் ஏதோ உறுத்திக் கொண்டே இருக்கிறது போல் தோன்றுகிறது. நீங்கள் வேண்டுமானால் உங்களுக்கு பிடித்தமான ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அதை பார்த்து சரி செய்து விடுங்கள் என்று ராதிகா கோபிக்கு அறிவுரை கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.
