Baakiyalakshmi Serial : தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு சின்னத்திரை நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இருக்கிறது என்று கூறினால் அது சற்றுமுன் மிகையல்ல.

அந்த வகையில் சின்ன திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாடகங்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகை கம்பம் மீனா அவர்கள். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் இவர் பிரபலமான நடிகை தான்.

குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான "முண்டாசுப்பட்டி" மற்றும் நடிகர் சூர்யாவின் "என்.ஜி.கே" போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் இவர். தற்பொழுது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகின்றார். 

Karthigai Deepam: தீபாவின் கச்சேரிக்கு எதிராக நடக்கும் சதி..! அலற விட்ட கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

இந்நிலையில் மீனா இப்போது ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார், அதில் நேற்று பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் தனது வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கையில் கட்டுடன் எடுத்த சில புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

View post on Instagram

இதனையடுத்து அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். பெரிய விபத்தாக மாற வேண்டியது, கையில் ஏற்பட்ட காயத்தோடு போனது என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். இதனால் அவர் சிறிது காலம் ஓவியடுத்து பிறகு சீரியலில் நடிக்க துவங்குவர் என்று கூறப்படுகிறது.

உங்க Rent-தான் என்னோட சம்பளமே.! VJ பார்வதியின் 1 மாத செலவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்! குவியும் கமெண்ட்ஸ்!