பாக்கியா செய்த தரமான சம்பவம்.. தெறித்து ஓடிய கோபி! அடேங்கப்பா வேற லெவலுக்கு கெத்து காட்டுறாங்களே!

கோபியை விட்டு பாக்கியா பிரிந்த பின்பு, பாக்கிய செய்யும் ஒவ்வொரு செயலும்... ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் சிறப்பான சம்பவம் செய்துள்ளார் பாக்கியா.
 

baakiyalakshmi give the big shock for gopi today episode latest update

கணவனே கண் கண்ட தெய்வம், குழந்தைகள், மாமியார், மாமனார் தான் தன்னுடைய உலகம் என வாழ்ந்து வந்த பாக்கியாவை, பெற்றோர் இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்து வைத்தததால்.. தன்னுடைய கல்லூரி காதலியான ராதிகாவை காதல் வலையில் வீழ்த்தி தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை துவங்கியுள்ளார் கோபி.

மேலும் தன்னுடைய குடும்பத்தின் முன்பு, சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக... வீட்டிற்கு எதிரிலேயே குடியேறியது மட்டும் இன்றி, பாக்கியாவுடன் ஒவ்வொரு விஷயத்திலும் மோதி மூக்கை உடைத்து கொள்கிறார் கோபி. போதாததற்கு, ராதிகாவின் ஐடி கம்பனியில் சமையல் ஆர்டர் எடுக்க வந்த பாக்கியாவுக்கு அந்த ஆர்டர் கிடைக்க விடாமல் செய்ய திட்டம் போட்ட நிலையில், அவரின் பாச்சாவும் பலிக்காமல் ஆர்டரை கைப்பற்றினார் பாக்கியா.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட புது பிளான்..! 25 வருடங்களுக்குப் ரீ என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்த ஜீவிதா..!

baakiyalakshmi give the big shock for gopi today episode latest update

தன்னுடைய மகன் எழிலின் ஒத்துழைப்பாலும், மருமகளின் உதவியாலும் வெற்றிகரமாககேண்டியனை நடத்தி வரும் பாக்கியா இன்றைய எபிசோடின் புரோமோவில் கோப்பியை ரோட்டிலேயே தெறித்து ஓட வைத்துள்ளார் என்றால் பாருங்கள். புது பொண்டாடி ராதிகா கடைக்கு போய் காய் கறிகள் வாங்கி வர சொல்ல... வெற்றிகரமாக அனைத்தையும் வாங்கிக்கொண்டு கோபி வந்து கொண்டிருக்க, பொருட்கள் இறக்குவதற்காக ஒரு வேன் வருகிறது. இடையில் செழியனின் கார் நிற்கவே, அதனை வீட்டிற்குள் பார்க் செய்ய எழில் சாவி எடுத்துக்கொண்டு வருகிறார். 

குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியது ஏன்..? காட்டமாக பதிலளித்த புகழ்..!

baakiyalakshmi give the big shock for gopi today episode latest update

அப்போது பாக்கியா நான் எடுத்து விடட்டுமா? நீ தானே ட்ரிவிங் சொல்லி கொடுத்த என கூற... முதலில் தயங்கிய எழில் பின்னர் நீ எடுத்து விடுமா என சாவியை கொடுக்கிறார். இதை காய் கறி வாங்கி வந்துகொண்டிருந்த கோபியும் பார்க்க நேரிடுகிறது. பாக்கியா கார் ஓட்டுறாளா என ஆச்சர்யத்துடன் பார்க்க, பாக்கியா பக்காவாக பார்க்க செய்யும் போது... கோபிக்கு ரோட்டிலேயே ஒரு சிறு ஜர்க் கொடுத்து ஓட விடுகிறார். இந்த சம்பவம் தரமானதாக அமைந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இது குறித்த புரோமோவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரம்யா பாண்டியனுக்கு ஏர்போர்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..! எதிர்பாராமல் நிகழ்ந்த பிரபலத்தின் சந்திப்பு!
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios