ரம்யா பாண்டியனுக்கு ஏர்போர்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..! எதிர்பாராமல் நிகழ்ந்த பிரபலத்தின் சந்திப்பு!
நடிகை ரம்யா பாண்டியன், ஷூட்டிங்கிங் செல்வதற்காக ஏர்போர்ட் சென்றபோது, முக்கிய பிரபலம் ஒருவரை சந்தித்தது குறித்து, புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் என்றால், அது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் தான். குரு சோமசுந்தரத்திற்கு ஜோடியாக சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தது.
இந்த படத்திற்கு பின்னர் கதைத்தேர்வு சரியாக இல்லாததால், சில தோல்விப்படங்களால் துவண்ட ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஃபுல் ஃபாமில் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடித்து ஒடிட்டியில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
உறுப்பு மாற்று செய்யப்பட்ட பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்! திரையுலகில் பரபரப்பு!
இதை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மாமூட்டிக்கு ஜோடியாக, ரம்யா பாண்டியன் நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இவரின் கைவசம் இடும்பன்காரி உள்ளிட்ட சில படங்கள் உள்ளது.
திரையுலகில் படு பிசியாக இயங்கி வரும், ரம்யா பாண்டியன் ஷூட்டிங் செல்வதற்காக ஏர்போர்ட் வந்த போது, அங்கு எதிர்பாராத விதமாக இயக்குனர் பாரதி ராஜாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் பேசி மகிழ்ந்த தருணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டு, சில புகைப்படங்களையும் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த படத்திவில், இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான பாரதிராஜா சாருடன் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. பல கேள்விகளைக் கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு, எல்லா பதில்களையும் வழங்கிய வழிகாட்டி - உண்மையிலேயே ஒரு அற்புதமான பயணம். விலைமதிக்க முடியாத தகவல்களுக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.