baahubali2 at the top of achievement

இந்திய சினிமா சரித்திரத்தில் எந்தவொரு படமும் ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை படைத்த சாதனைகள் ஏராளம். அதன் மூலம் ஈட்டிய பெரும் புகழும் தாராளம். அவற்றில் சுவையான தகவல்கள் சில உங்களுக்காக...

பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகிறது.

இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது.

பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் ஈட்டிவிட்டது.

காட்சிகள் வெளியாகிடுமோ என்ற பயத்தில் ராஜமௌலி 4 கிளைமேக்ஸ் காட்சிகளை இயக்கியிருக்கிறார்.

டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

உலகளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி 2 வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி ரிலீசுக்கு பின் "பாகுபலி தளி" என்ற உணவு ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

படம் வெளியாகி பத்து நாட்களுக்குள் 1000 கோடி ரூபாய் வசூலை அல்லி குவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

9000க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ. 30 கோடி செலவாகியுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானிய, ஃபிரெஞ்சு மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு திரைப்படத்துறையில் 4K எச் டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.



உலகளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தென்னிந்திய திரைப்படம் பாகுபலி.

முதல் பாகம் வெளியான பிறகு பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஹேஷ்டேக்குகள், மீம்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாக வலம் வந்தன.

Jurassic World படத்தில் பணியாற்றிய அனைவரும் இப்படத்திற்கான VFX வேலைகள் செய்துள்ளனர்.

பிரபாஸின் கடின உழைப்பிற்காக அவருக்கு பாகுபலி கவசத்தை பரிசலித்துள்ளார் ராஜமௌலி.

இந்தியாவில் பிரபல காமிக் புத்தகமான அமர சித்ர கதைகள் மீதான ஈர்ப்பு பாகுபலி என்ற திரைப்படத்தை எடுக்க இயக்குநர் ஜமெளலிக்கு முக்கிய காரணமாக இருந்தது.



பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக தெலுங்கு நடிகர் பிரபாஸ் தன்னுடைய எடையை 120 கிலோவில் இருந்து 150 கிலோவாக கூட்டினார். 

பாகுபலி-2 படத்தின் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்கள் அதை பார்த்தது இதுவரை இல்லாத சாதனை ஆகும்.

மொத்தத்தில் பாகுபலி-2 எத்தனை கோடி லாபம் ஈட்டியது என்பது இனிதான் தெரிய வரும். அதுவும் சாதனை அளவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.