உலக மக்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "பாகுபலி 2 " திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ளதுப் பற்றி நடிகை தமன்னா கூறுகையில், நான் பாகுபலி திரைப்படத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்றும் நான் ராஜமௌலி சாரின் தீவிர ரசிகை என்றும் கூறியுள்ளார்.

பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் பெருவாரியான காட்சிகளில் தோன்றிய தனக்கு இரண்டாவது பாகத்திலும் பல காட்சிகளில் தோன்றும் வாய்ப்பை இயக்குனர் கொடுத்துள்ளதாக கூறினார், மேலும் இது போன்ற சரித்திரப்  படங்களில் 2 நிமிடம் வந்தாலும் அது பெருமைதான் என தெரிவித்தார்.

அதே போல், பேச்சு வாக்கில் இந்த படத்தின் கிளைமாக்ஸ்க்கு நான் தான் முக்கிய காரணம் என்று இத்தனை நாள் பலர் மூடிவைத்திருந்த ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் தமன்னா... இதனால் படக்குழுவினர் தமன்னாவை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது .