இயக்குனர் ராஜமௌலியின் ஐந்தாண்டு தவமாக வெளியாகி இருக்கும் பாகுபலி 2 திரைப்படம் தற்போது அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

பல பெண்கள் பாகுபலிக்கு ரசிகையாக மாரி,  பாகுபலி போஸ்டர் அச்சிடப்பட்ட புடவைகளை வாங்கி அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஹைதராபாத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில், பாகுபலி 2 நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாகுபலி 2 படத்திற்கு அதிகாரப்பூர்வமாக அணிகலன்களை செய்து கொடுத்த ஹைதராபாத்தில் இயங்கி வரும் ‘அமர்பள்ளி ஜுவல்லர்ஸ்’,தற்போது பாகுபலி நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாகுபலி படத்தில் பயன்படுத்தப்பட்ட 1500 வகையான நகைகளில், 1000 வகை நகைகள் இந்த கலெக்சனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நகைகள் அனைத்தும் கைகளால் உருவாக்கப்பட்டதாம். மேலும் பலவிதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜெய்ப்பூரில் உள்ள அமரபள்ளி நகைக்கடையின் கிளையில் இந்த நகைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த நகைகள் 600 ரூபாயிலிருந்து 58,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.