baagamathi movie tesear review

நயன்தாராவுக்கு முன்பே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகை அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளிவந்த,'அருந்ததி, 'ருத்ரமா தேவி' , 'இஞ்சி இடுப்பழகி' , 'பாகுபலி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.

பாகுபலி படத்தின் மூலம் 'இந்திர சேனாவாக' அனைவரையும் ரசிக்க வைத்த அனுஷ்கா... அடுத்ததாக நடித்து வரும் பாகமதி படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார் எனத் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள பாகமதி படத்தின் டீசரில், தன்னுடைய உடல் எடையைக் குறைத்து, இவர் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று யூகிக்க முடியாத நிலையில் தன்னுடைய கையைத் தானே சுத்தியால் தாக்கிக்கொள்வது போல் இந்த டீசரில் அனுஷ்கா இடம்பெற்றுள்ளார். சற்றும் யூகிக்க முடியாத இவரது தோற்றத்தால் இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.