வெள்ள வெள்ளையா காரு, வில்லன்களுக்காகவே அருவா, கத்தி, முரட்டுத்தனமான கும்பல் கும்பலாக அடியாட்கள் இதை மொத்தமாக புரட்டியெடுக்கும் கதாநாயகன், மிரட்டும் சண்டைக்காட்சிகள், பரபரப்பான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை இது தான் ஹரி படம். 

எப்போதுமே ஹீரோ யாரென்றாலும் ஹரி படம் என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சூரியா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தையடுத்து  விக்ரம் நடிக்கும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார் அதிரடி இயக்குனர் ஹரி. இப்படத்தைப்பற்றிய படக்குழு தரப்பிலிருந்து அறிவிப்பு வந்த நாளிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 

இப்படத்தில் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவே ஜோடியாக நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றொரு நாயகியாக  நடிக்கின்றனர். மேலும், படத்தின் வில்லனாக மிரட்ட "பாபி சிம்ஹா" நடிக்கிறார். சாமி 2 முதல் பாகத்தை விட செம ஃபையராக, பரபரப்பாகவும் இருக்கும் என்று தெரிகிறது. 

சாமி முதல் பாகம் திருநெல்வேலி பகுதிகளில் படமாக்கப்பட்டது. இரண்டாவது பாகத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.