அழியாத கோலங்கள்-2 படத்தின் கதை இதுதான்..! 

பி.சி. ஸ்ரீ ராம் இயக்கிய ' மீரா ' படத்தின் வசனம் எழுதியவ டைரக்டர் எம்.ஆர். பாரதி ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் அழியாத கோலங்கள்-2 

படத்தின் கதை என்ன ? 

எழுத்தாளராக பிரகாஷ் ராஜ், அவரது மனைவியாக ரேவதி. இவர்களுக்கு ஒரே மகன் அமெரிக்காவிலேயே திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிட்டார். இந்த ஒரு நிலையில் சாகித்ய அகாடமி விருது பெற டெல்லி வருகிறார் பிரகாஷ் ராஜ். விருது வாங்கியவர் அதை எடுத்துக் கொண்டு நேராக வீட்டிற்கு வராமல், ரயிலில் டிக்கெட் புக் செய்து இருந்தாலும் அதை கேன்சல் செய்துவிட்டு சென்னையிலேயே வசிக்கும் தனது கல்லூரி தோழியான அர்ச்சனாவை சந்திக்க செல்கிறார் பிரகாஷ்.

கணவரை இழந்து வாடும் நபராக வருகிறார் அர்ச்சனா....இவருக்கு ஒரே மகள் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். 24 வருடங்கள் கழித்து சந்திப்பவர்கள் பல விஷயங்களை பேசி   மகிழ முடிவெடுக்கிறார். விடிய, விடிய பல விஷயங்களை பேசுகின்றனர். குட் ஃநைட் தனித்தனியே சொல்லிவிட்டு படுக்க செல்கின்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே பிரகாஷ் ராஜ் மாரடைப்பு வந்து இறந்துப் போகிறார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர் குற்றப் பார்வையிலிருந்து மீள அர்ச்சனாவிற்கு என்ன வழி..?

விசாரணைக்கு வரும் நாசரின் குதர்க்கமான கேள்விகள்... அரசியல்வாதி விஜய் கிருஷ்ண ராஜின் எதிர்பார்ப்பு..மகளின் கடுமையான பேச்சு, பிரகாஷ் ராஜின் மனைவி ரேவதியின் அணுகுமுறை- இவற்றுக்கிடையே தணலில் விழுந்த புழுப் போல அர்ச்சனாவின் அபாரமான நடிப்பு, 

பிரகாஷ் ராஜ்- பிரமாதமான நடிகர் என்பதை இம்மியளவும் பிசகாமல் கொடுத்து அப்ளாஸ் வாங்குகிறார். ரேவதியும் சும்மாவா என்ன..? உணர்வுப்பூர்வமான பெண்மணியாக வந்து அர்ச்சனாவை சந்தித்துப் பேசுவது சூப்பர்..!

இன்ஸ்பெக்டர் நாசரின் விசாரணை, அர்ச்சனாவை இரிட்டேஷன் செய்வது என்று அட்டகாசமான நடிப்பு...என மிகவும் அருமையாக செல்கிறது. ஆக மொத்தத்தில் முடிவு என்ன என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.