Ayyan 2 is directed by Vikram and KV Ananth ...

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் நடிகர் விக்ரமுடன் இணைந்து ‘அயன் 2’ படத்தை இயக்க இருக்கிறாராம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, பிரபு, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அயன்’.

2009-ல் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றிப் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பு. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கே.வி.ஆனந்த் இயக்க முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் தற்போது சூர்யாவுக்கு பதிலாக அவர் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம்-ஐ நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

‘அயன் 2’ படத்தின் ஒன்லைன் கதையை விக்ரமிடம் கூறி அனுமதி கூட வாங்கிவிட்டாராம். அடுத்து என்ன கூடிய விரைவில் ஷூட்டிங்க் ஸ்டார் பண்ண வேண்டியது தான்.