ஹாரர் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, கமர்ஷியல் இயக்குநர் எழில் இயக்கியுள்ளார். 
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

அவர்களுடன் சதீஷ், பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு, சி.சத்யா இசையமைத்துள்ளார். 


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளது. 

இதனையடுத்து, படத்தை விளம்பரப்படும் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. 
ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

இதனால், ஆயிரம் ஜென்மங்கள் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில், 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் டிரைலர் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த டிரைலரை, ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பரும், நடிகருமான தனுஷ், தனது டுவிட்டர் மூலமாக வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.