பிரபல நடிகை ஆயிஷா தாகியாவுக்கு தொடர்ந்து மிரட்டல் மெசேஜ்கள் வருவதாகக் கூறி, அவரது கணவர் ட்விட்டர் மூலம் பிரதமர் மோடியிடம்  முறையிட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு இந்தியில் வெளியான டார்சன் தி வொண்டர் கார் என்ற தனது அறிமுகப் படத்திலேயே மிகவும் பேசப்பட்டு, பல விருதுகளை வாங்கிய நடிகை ஆயிஷா தாகியா, மார்பகங்களை பெரிதாக்க அவர் செய்து கொண்ட அறுவைச் சிகிச்சையால், மிகவும் பிரபலமானார்.இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த அவர், பர்ஹான் ஆஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மாஇருக்காது என்பதற்கு ஏற்ப, ஆயிஷா தாகியா திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இருந்தே படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருவதோடும், சமூக வலைதளங்களிலும் தீவிரமாக இயங்கி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இந்நிலையில், நடிகை ஆயிஷா தாகியாவுக்கு அண்மையில் தொடர்ந்து மிரட்டல் மெசேஜ்கள் வருவதாக, அவரது கணவர் பர்ஹான் ஆஷ்மி தெரிவித்துள்ளார். தொழில்முறை நண்பர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளித்ததில் இருந்தே இதுபோன்ற மிரட்டல் மெசேஜ்கள் வருவதாகவும், ஆயிஷா தாகியா மட்டுமின்றி, தனது தாய் மற்றும் சகோதரிக்கும் வருவதாக கூறியுள்ள அவர், இதனால் தனது குடும்பத்தினர் எப்போதும் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மிரட்டல் மெசேஜ்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, மும்பை காவல்துறை இணை ஆணையர் பரம்ஜித் சிங் தஹியாவிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், பரம்ஜித் சிங் தஹியாவை பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும், தன்னால் அது முடியவில்லை என்று நொந்துபோய் கூறியுள்ளார். மேலும், மும்பை காவல்துறை இணை ஆணையர் தஹியாவுக்கு செய்த அழைப்புகளையும், மெசேஜ்களையும் பர்ஹான் ஆஷ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டதுடன், தனது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.எனக்கு உதவி செய்யுங்கள் என அவர் டுவிட்டர் மூலம் பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ள பர்ஹான் ஆஷ்மி, அடுத்த டுவிட்டரில் ஐபிஎஸ் அதிகாரி தேவன்பாரதி நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி எனக் கூறியதோடு, மும்பை காவல்துறையை நான் நம்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.