ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து பல மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று கூடி அமைதியான முறையில் அறவழி போராட்டம் நடத்தினர்.

அனால் கடந்த 23ம் தேதி தீடீர் என காவல்கள் மாணவர்களில் போராட்டத்தை கலைக்க கல் வீச்சு, தடியடி போன்ற கலவரத்தை ஏற்படுத்தியதால் அமைதியான நிலை மாறி பரபரப்பு நிலவியது.

இதனால் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மாணவர்களுக்கு துணையாக களத்தில் இறங்கி போராடிய பல திரைத்துறையினரும் இதை வன்மையாக கண்டித்தனர்.

தற்போது நடிகர் சிம்பு நடிக்கும் AAA படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நாளை நாம் யாரும் குடியரசு தினத்தை கொண்டாடக்கூடாது, என்றும் குடியரசு தினத்தை புறக்கணிப்போம் என சமூக வலை தளத்தில் கூறியுள்ளார்.

மேலும் முதலில் நாம் தமிழன், பிறகு தான் இந்தியன். காவல்துறையையும், தமிழக அரசும் வெட்கப்பட வேண்டும், வாங்கியதை திருப்பிக்கொடுப்போம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.