ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' திரைப்படம் தற்போது, உலகம் முழுவதும் வெளியாகி பல திரையரங்கங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது. 

குறிப்பாக தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் படங்களின் ஓப்பனிங் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்துவிட்டாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும் அனைத்து  திரையரங்கங்களும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' கடைசி சீரிஸ் என்பதால்,  இந்த படத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஐயன் மேன் கதாப்பாத்திரம், மற்றும் மற்றொரு கேரக்டர்கள் இறந்து இறந்துவிடும். ஆனால் இதுபோன்ற ஒரு ட்விஸ்டை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்க வில்லை. இதனால் பலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சீனாவிற் சேர்ந்த பெண் ஒருவர் இந்த படத்தில் அவருக்கு பிடித்த,  இரு கதாப்பாத்திரம் இறந்ததை பார்த்து, அழுதுகொண்டே இருந்துள்ளார். ஒரு நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் வர மூச்சி விட முடியாத நிலைக்கு சென்று, மயங்கி விழுந்தார். உடனடியாக இவரை அவருடைய தோழி, மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த பின்பே பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். இதுபோன்றும் சில ரசிகர்கள் அவெஞ்சர்ஸ் படத்திற்கு உள்ளது பிரபமிக்க வைத்துள்ளது.