4K தரத்தில் 3D தொழில்நுட்பத்துடன் ரீ மாஸ்டர் செய்து அவதார் படத்தின் முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

டைட்டானிக் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கியதன் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் அவதார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான இப்படம் உலக சினிமா ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதையடுத்து அவதார் 2 எடுக்க உள்ளதாக அறிவித்த ஜேம்ஸ் கேமரூன், 13 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் அதனை நிகழ்த்தி காட்டி உள்ளார். 2020-ம் ஆண்டே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் இப்படம் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆலியா பட்டின் திமிர் பேச்சால் வந்த சிக்கல் - பிரம்மாஸ்திரா படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பால் படக்குழு கலக்கம்

Scroll to load tweet…

அவதார் படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் இருக்கும் என கூறப்படுகிறது. இதன்காரணமாக அவதார் படத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தை 4K தரத்தில் 3D தொழில்நுட்பத்துடன் ரீ மாஸ்டர் செய்து வருகிற செப்டம்பர் 23-ந் தேதி உலகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Scroll to load tweet…

இதற்காக ஸ்பெஷல் டிரைலர் ஒன்றையும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்ளார். அவதார் படத்தின் 2-ம் பாகம் வரும் வரை இதனை கண்டுகளிக்குமாறு அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். குறுகிய காலத்துக்கு மட்டுமே அவதார் படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு மூன்று ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய கையோடு தனுஷ் பட நாயகியாக மாறிய மைனா...