Asianet News TamilAsianet News Tamil

'ஒவ்வொரு பூக்களுமே...' பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவிற்கு பலி...!

கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரானாவிற்கு, 'ஆட்டோகிராஃப்' பட பிரபலம் கோமகன் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

autograph movie celebrity komagan death for corona
Author
Chennai, First Published May 6, 2021, 9:47 AM IST

கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரானாவிற்கு, 'ஆட்டோகிராஃப்' பட பிரபலம் கோமகன் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2004-ம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கி, நடித்து, தயாரித்திருந்த திரைப்படம் 'ஆட்டோகிராஃப்'. பொதுவாகவே பலர் தங்களது பள்ளி, கல்லூரி, காலங்களில் கடந்து வரும் காதலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில், மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா, என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். மேலும் ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் தேசிய விருதையும் பெற்றது.

autograph movie celebrity komagan death for corona

இந்த படத்தில் அனைவரையும் மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று 'ஒவ்வொரு பூக்களுமே'... இந்த பாடலில் பார்வை குறைபாடு உள்ள கோமகன் இசைக்குழுவினர் இடம்பெற்று இருப்பார்கள். இந்த பாடலின் இறுதியில் கோமகனும் உணர்வு பூர்வமாக கண்கலங்கியபடி பாடி இருப்பது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைக்கும் விதத்தில் இருக்கும்.

autograph movie celebrity komagan death for corona

மேலும் பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக கடந்த 2008 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட ஊனமுற்றோருக்கான முதல் தமிழக நலசங்கத்தின் நிர்வாக உறுப்பினராக கோமகன் பணியாற்றி வந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா காலம் துவங்கியதில் இருந்து மேடை கச்சேரிகள் கிடைக்காமல் கோமகன் குழுவினர் அவதிப்பட்டு வருவதாக சில தகவல்கள் வெளியானது.

autograph movie celebrity komagan death for corona

கடந்த சில நாட்களாக கோமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இயக்குனர் சேரன்... "வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது..  கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios