David Warner : ராக்கி பாய் ஆக மாறிய டேவிட் வார்னர்... கே.ஜி.எஃப் 2 பஞ்ச் டயலாக் பேசி அதகளம் - வைரலாகும் வீடியோ
David Warner : கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பேமஸான பஞ்ச் டயலாக்கை பேசி டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர், தற்போது ஐபிஎல்-லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி அணி அவரை எடுத்தது. தற்போது டெல்லி அணியில் அதிரடி காட்டி வருகிறார் வார்னர்.
டேவிட் வார்னர் ஐதராபாத் அணியில் இருந்தபோது அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் ஆர்வம் அதிகரித்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய படங்களின் பாடல்களையும், டயலாக்குகளையும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டு இந்தியர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆகி விட்டார் டேவிட் வார்னர்.
குறிப்பாக இவர் கடந்தாண்டு வெளியிட்ட புஷ்பா படத்தின் ரீல்ஸ் மிகவும் வைரல் ஆனது. அதுமட்டுமின்றி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு இவர் குடும்பத்துடன் ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவுக்கும் லைக்குகள் குவிந்தன.
இந்நிலையில், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி, கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பேமஸான பஞ்ச் டயலாக்கை பேசி அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. கையில் கிரிக்கெட் பேட் உடன் ராக்கி பாய் ஆக மாறி அந்த வசனத்தை அசத்தலாக பேசி அதகளப்படுத்தி உள்ளார் வார்னர்.
இதையும் படியுங்கள்... Beast Part 2 : என்னது பீஸ்ட் 2-ம் பாகம் வருதா? - புது குண்டை தூக்கிப்போட்ட நெல்சன்... ஓகே சொல்வாரா தளபதி?