தமிழ் சினிமாவில், கிட்ட தட்ட 6000 பாடல்களுக்கு ஒலிப்பதிவு செய்த, பிரபல கலைஞர், ஏ.வி.எம்.சம்பத் கலாமானார். இவருடைய இழப்பு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகில் அடுத்தடுத்து, பல துயர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இர்பான் கான் என அடுத்தடுத்து திறமையான கலைஞர்கள் மறைவை தொடர்ந்து. தற்போது ஏ.வி.எம்.சம்பத்தின் இழப்பிற்கு பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

87 வயதாகும் இவர், சுமார் 50 வருடங்களாக பல மொழி திரைப்பட பாடல்களுக்கு ரெகார்டிக் பணிகளை மேற்கொண்டவர். அந்த காலத்திலேயே திரையுலகின் மேல் உள்ள ஆர்வத்தில், தன்னுடைய பூர்வீக ஊரான திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து, ஒலிப்பதிவு சம்மந்தமான டிப்ளமோ படிப்பை முடித்து தன்னுடைய பணியை துவங்கியவர். 

புகழ் பெற்ற ஒலிப்பதிவாளர்களான ராபின் சட்டர்ஜி, மிஸ்ரா, முகுல் போஸ் ஜேஜே மாணிக்கம் உள்ளிட்ட பலருடன் பணியாற்றியுள்ள பெருமையும் இவருக்கு உண்டு.

பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட இசை ஜாம்பவான்களுடன் 100 க்கும் மேற்பட்ட பாடலுக்கு ரெகார்டிங் பணி செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக அவதி பட்டு வந்த இவர், கடந்த வெள்ளி கிழமை அன்று, காலமானார். இவர் ஜானகிகுட்டி என்கிற மலையாள படத்திற்காக, தேசிய விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.