விஷாலின் திருமணம் நிச்சயதார்த்தம் வரை முடிந்த பின் அப்படியே ஸ்டிரக் ஆகி நிற்கிறது. சிலர் அந்த திருமணம் நடக்காது, பிரேக் - அப் ஆகிவிட்டது! என்கிறார்கள். ஆனால் விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டியோ ’விஷால் திருமண விஷயத்தில் கொஞ்சம் பொறுமையா இருங்க சினிமா நண்பர்களே, மீடியா நண்பர்களே. நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து, அவர் மறுபடியும் வின் பண்ணட்டும். அதே நேரத்துல நடிகர் சங்கத்தின் கட்ட வேலையும் முடியட்டும். இதெல்லாம் நடக்கும், கல்யாணமும் நடக்கும்.’ என்கிறார். (சர்தான்!)

* ’எனக்கு மாப்பிள்ளைலாம் பார்க்கலை’ என்று திருமண மும்முரத்தை தமன்னா தள்ளிப்போட்டாலும் கூட, அவர் அதை நோக்கித்தான் நகர்கிறார்! என்பது சமீப காலமாக அவரது பட தேர்வுகளில் இருந்தே புரிகிறது. கவர்ச்சியை டோட்டலாக குறைத்துவிட்டு, நடிப்புக்கு முக்கியத்துவமான கதைகளை மட்டுமே பொண்ணு டிக் பண்ண துவங்கிடுச்சு. (பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?)

*கமல்ஹாசனும், ஸ்ருதியும் இணைந்து ‘அசுரன்’ பார்த்தனர். அதன் பின் தனுஷை தொடர்பு கொண்ட கமல் தன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளாராம். இதே மாதிரி கதையம்சமான படங்களை தொடர்ந்து நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். (ஒலகநாயகனும், தனுஷும் இணைந்து ஒரு படம் நடிச்சாதான் என்னவாம்!)

*பிகில்- படத்துக்கு பின் அட்லீ இயக்கப்போவது  இந்தியில் ஷாரூக்கானையா அல்லது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரையா என்று ஒரு பட்டிமன்றம் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில், ஹாலிவுட் பாஷாவான பில் டியூக்கை வைத்து ஹாலிவுட் படமொன்றை அட்லீ இயக்க இருக்கிறார்! என்கிறார்கள். 
(அப்படின்னா ஹிட் ஹாலிவுட் படங்களோட ப்ளூரே ப்ரிண்ட்டை அட்லீக்கு பரிசா கொடுக்கலாமுன்னு சொல்லுங்க)

* ஒரு படம் முடிந்துவிட்டால்,    முன்பெல்லாம் ரஜினியை இமயமலையின் சந்து பொந்துகளில் கிட்டத்தட்ட மூணு நாலு மாசம் வரையில் அடிக்கடி சந்திக்கலாம். ஆனால் ‘அரசியலுக்கு வர்றேன்’ என்று சொன்ன பிறகு மனுஷன் இமயமலை வாசத்தை குறைத்துக் கொண்டார். ஆனால் இப்போது ‘தர்பார்’ முடித்த கையோடு, சன்பிக்சர்ஸுக்காக சிறுத்தை சிவாவுடன் அடுத்த படம் துவங்கும் முன் சுமார் ஒரு வார கால குறுகிய பயணமாக இமயமலைக்கு சென்றுவிட்டார். (அங்குட்டு நல்ல அகோரியா பார்த்து, ‘கட்சி துவங்கினால் கலக்கலாமா?’ன்னு சோழி போட்டு பார்ப்பாரோ?)