இயக்குனர் அட்லீ 'ராஜா ராணி' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து, தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை வரிசையாக இயக்கினார். இந்த மூன்று படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனவே இவரின் அடுத்த பட ஹீரோ யாராக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதே சமயத்தில், தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்து விட்டதால், நான்காவது முறையாக அட்லீ உடன் மீண்டும் கைகோர்ப்பாரா என்கிற கேள்வியும் சில ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.

எனவே அட்லீ, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுடன் கைகோர்க்க உள்ளது கண்ஃபாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஷாருக்கான் சென்னை வந்தபோது அட்லீயை அவருடைய அலுவலகத்தில் சென்று சந்தித்தார். 

ஷாரூக்கானுக்கான கதையை தயார் செய்வதில் மும்முரமாக இருந்த அட்லீ, விரைவில் தான் இயக்க உள்ள படம் குறித்த தகவலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.