அட்லீயின் அடுத்த சம்பவம்... புர்ஜ் கலிஃபாவில் ரிலீசாகும் ஜவான் டிரைலர் - அதுவும் இந்த தேதியிலா?

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Atlee Directional Shah Rukh khan's Jawan movie Trailer will release on Burj Khalifa gan

தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் என வரிசையாக மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டுக்கு பறந்தார். அங்கு ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். ஜவான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஷாருக்கான் தான் அப்படத்தை தனது மனைவி கெளரி கான் உடன் இணைந்து தயாரித்தும் உள்ளார்.

ஜவான் படத்தின் மூலம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் இதுவரை வெளிவந்த இரண்டு பாடல்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... ஊரே Vibe பண்ண உருளைக்கிழங்கு செல்ல குட்டி.. பாடியது யார் தெரியுமா? அந்த விஜய் டிவி சூப்பர் சங்கரின் Wife தான்!

Atlee Directional Shah Rukh khan's Jawan movie Trailer will release on Burj Khalifa gan

ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. ஜவான் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அப்படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த மாஸான தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதன்படி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஜவான் படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளதாம். இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிரைலரை உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தான் இந்த டிரைலர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்படத்தின் டிரைலர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... 'டாடா' பட வெற்றிக்கு பின்னர் இளன் - யுவன் கூட்டணியில் கவின் இணையும் 'ஸ்டார்'! வெளியான செம்ம அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios