இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'அருவி'. முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அதிதி பாலன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தொடர்ந்து, இவருக்கு பல்வேறு படங்களின் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும், அவை எதையும் இவர் ஏற்று கொள்ளவில்லை. மேலும் போன் செய்தால் கூட அதனை எடுப்பதில்லை என்றும், யாரவது போன் நம்பர் கேட்டல், மெயில் ஐடியை கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பின், பிரபல முன்னணி மலையாள நடிகர் நிவின் பாலியின் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதிதி. இந்த படத்தை லிஜு கிருஷ்ண என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ள நிலையில், படம் வெற்றி பெற அனைவரும் கடவுளிடம் பிராத்தனை செய்யுமாறு, அதிதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு இதோ...

View post on Instagram