தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் அஜீத் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், இயக்குனர் ஸ்ரீகணேஷின் இரண்டாவது படமான குருதி ஆட்டத்தில் அஜித் ரசிகராக நடிகர் அதர்வா நடிக்கும் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அவர் தற்போது குருதி ஆட்டம் என்னும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதை குறித்து இதுவரை எதுவும் சொல்லாமல் சஸ்பென்ஸ் காத்துவந்த ஸ்ரீகணேஷ், தற்போது கதையின் நாயகனே ஒரு அஜீத் ரசிகர் மன்றத்து ஆள்தான் என்று போட்டு உடைத்திருக்கிறார்.

அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், மதுரையில் உள்ள கேங்ஸ்டர்களின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் கபடி வீரராக அதர்வா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க, ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் குருதி ஆட்டத்தில் அஜித் ரசிகராக நடிகர் அதர்வா தலயின் வழியில் செல்ல முடியாமல் பயங்கர அடிதடியில் இறங்குவதாகத்தெரிகிறது. நிஜத்திலும் அஜித் ரசிகரான அதர்வா சினிமா நிகழ்ச்சி ஒன்றில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமானது, படத்தில் செட் பிராப்பர்ட்டியாக அதர்வா வீட்டில்இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்து அதர்வா மிகவும் ஆச்சரியப்பட்டார் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.