4 வயதிலேயே அஜித் மகன் ஆத்விக் மூன்றாம் இடம் பிடித்து அப்பாவையே மிஞ்சி இருக்கிறார் ஆத்விக். அப்படி அவர் செய்துவிட்டார்? அப்பாவை போல பைக் ரேசில் கலந்து கொண்டாரா? சினிமாவில் நடிக்க வந்துவிட்டாரா? என்றெல்லாம் கேட்டால் மன்னிக்கவும் அவர் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சோசியல் மீடியாவான ட்விட்டர் பக்கத்தில் தமிழக அளவில் ட்ரெண்டாகி தெறிக்க விட்டு வருகிறார்.

 

2015ம் ஆம் ஆண்டு பிறந்த ஆத்விக் நான்கு வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் தனது தயார் ஷாலினியுடன் காரில் வந்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் செல்ஃபி போட்டோ எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அந்தப்புகைப்படத்தில் இன்னொரு விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இப்போது பரம ஏழைகளே ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வரும் நிலையில் ஷாலினி கையில் வைத்து இருக்கும் பேசிக் ரக மொபைலை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.  இந்த போட்டோக்களை பதிவிட்டு #AadvikAjith என்கிற  ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி தெறிக்கவிட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். 

அஜித் படங்கள் வெளியாகும் போது அல்லது பிறந்த நாளின் போது அவரது ரசிகர்கள் ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்குவார்கள். ஆனால் குட்டித்தல ஆத் விக் செல்ஃபி எடுத்த போட்டோக்களை வைத்தே ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அந்த வகையில் அப்பாவையே மிஞ்சி விட்டார் ஆத்விக்.