SURIYA: சூர்யாவின் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும் என்றும், தனக்கும் அது போன்ற ஸ்கிரிப்டில் நடிக்க ஆசையாக உள்ளது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான அஸ்வின் குமார் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் "என்ன சொல்லப் போகிறாய்" படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின். அந்த படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது. முன்னதாக "என்ன சொல்லப் போகிறாய்" படத்திலிருந்து உருட்டு என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களை சேனா குஷிப்படுத்தியுள்ளது. 

இந்த படத்தின் ட்ரெய்லரில் நேற்று வெளியானது அஸ்வினின் ரோமன்ஸ் சீன்களுடன் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

YouTube video player

இந்நிலையில் "என்ன சொல்லப் போகிறாய்" இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் சூர்யா குறித்து பேசியிருந்தது தற்போது வைராக்கி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அஸ்வின் பேசுகையில்; சூர்யாவின் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும் என்றும், தனக்கும் அது போன்ற ஸ்கிரிப்டில் நடிக்க ஆசையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…