அவர் நேபாளம் வழியாக வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், ஈக்வடார் அருகே ஒரு தீவை சொந்தமாக விலைக்கு வாங்கியிருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. அந்த தீவுக்கு கைலாசா என பெயரிட்டு, எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம் நித்யானந்தா.

இந்த நாட்டுக்கென்று தனி கொடி, பாஸ்போர்ட், மொழி ஆகியவற்றையும் நித்தியானந்தா உருவாக்கி உள்ளதாகவும், நித்தியானந்தாவே இந்த நாட்டிற்கு  பிரதமராக இருப்பதாக அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக செய்திகளும், மீம்ஸ்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்தரன் தனது டுவிட்டர் பக்கத்தில், "'கைலாசா' நாட்டிற்கு செல்ல விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ..?" என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு காமெடி நடிகர் சதீஷ் செம கலாயாக பதில் அளித்துள்ளார். 

அஷ்வினுக்கு பதிலளித்துள்ள அவரது ட்வீட்டில், "சொல்கிறேன் பக்தா.." என்ற கேப்ஷனுடன் ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் நித்தியானந்தா கெட்டப்பில் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

அச்சு அசலாக பார்ப்பதற்கு நித்யானந்தாவைப் போலவே இருக்கும் சதீஷின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள், "ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டேன் நம்ம நித்யானந்தாவான்னு சேம் சேம் வெல் ப்ரோ" என்றும், "இனி நீங்க சதீஷானந்தா என அழைக்கப்படுவீர்கள்" என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.