படத்தில் தனுஷின் நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழில் அசுரனுக்கு கிடைத்த அசுரத்தனமான வரவேற்பால், இந்தப் படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. அங்கு, தனுஷ் நடித்த கேரக்டரில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.


ஆனால், படத்தின் இயக்குநர், ஹீரோயின் யார்? என்பதில் மட்டும் குழப்பம் நீடித்து வருகிறது. 'அசுரன்' தெலுங்கு ரீமேக்கை  ஸ்ரீகாந்த் அத்தலா, ஹனு ராகவபுடி ஆகியோரில் ஒருவர் இயக்குவார்கள் என கூறப்பட்டது. 

தற்போது, இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் அத்தலாவே இயக்குவார் என தெரிகிறது. இதேபோல், தனுஷின் மனைவியாக நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியார் கேரக்டரில் யார்? நடிக்கபோகிறார்கள் என்றும் தெரியவில்லை. 

முன்னதாக, இந்தப் படத்தில் ஸ்ரேயா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது, மஞ்சுவாரியார் கேரக்டரில் நடிக்க அனுஷ்காவிடம் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் 'அசுரன்' தெலுங்கு ரீமேக்கின் ஹீரோயின் குறித்து தயாரிப்பு தரப்பு ஒரு முடிவுக்கு வரும் என்றும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.