தற்போது நடிகர் நிதீஷ் வீரா கொரோனாவால் காலமாகியுள்ள சம்பவம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கோலிவுட்டில் திரையுலகைப் பொறுத்தவரை அடுத்தடுத்த மரணச் செய்திகள் வெளியாகி திரையுலகினரை நிலைகுலைய வைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்றால் பலரும் மரணமடைந்து வருவது திரையுலகினர் அச்சத்தின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி காலமானார். அந்த பெருஞ்சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்னதாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். 

அதனைத் தொடர்ந்து பிரபல காமெடி நடிகரான பாண்டு கடந்த 6ம் தேதி கொரோனாவால் மரணமடைந்தார். மே 11ம் தேதி ‘கிணத்தைக் காணோம்’ காமெடி புகழ் நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்தார். ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் மாறன் இரு தினங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியானார். 

இதைத் தவிர ‘ஒவ்வொரு பூக்களுமே’ புகழ் கோமகன்,‘என்னடி முனியம்மா’ பாடல் புகழ் தெம்மாங்கு பாடகர் மற்றும் நடிகரான டி.கே.எஸ் நடராஜன். மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை என அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமைராஜா ஆகிய படங்களில் காமெடி ரோலில் நடித்தவரும், இயக்குநர் பொன் ராமின் இணை இயக்குநருமான பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். அதே நாளில் ‘தில்லுக்கு துட்டு’,‘சதுரங்க வேட்டை’,‘காக்கி சட்டை’,‘கருப்பன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ஐயப்பன் கோபி இன்று காலமானார். 

தற்போது நடிகர் நிதீஷ் வீரா கொரோனாவால் காலமாகியுள்ள சம்பவம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிதித்துள்ளார். இறுதியாக இவர் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தில் நடித்து வந்தார். இப்படி ஒரு படத்தில் இவர் கொரோனா தொற்று காரணமாக காலமாகியுள்ளார் இவரது இறப்பிற்கு செல்வராகவன் இவர் நடித்த புதுப்பேட்டை படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு ‘RIP என்னுடைய மணி ‘என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.