‘பிகில்’பட கதைத் திருட்டு சம்பந்தமான வழக்கில் நீதி வென்றுவிட்டது. இயக்குநர் அட்லி கதையைத் திருடவில்லை என்பது போன்ற ஒரு பிரச்சாரம் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர் கே.பி.செல்வா தனது முகநூல் பக்கத்தில் உண்மை நிலவரம் என்பது என்ன என்பது குறித்து குமுறியிருக்கிறார். ஆனால் அவரது பதிவில் உள்ள எழுத்துப் பிழைகளைத்தான் சகித்துக்கொள்ளமுடியவில்லை.

’பிகில்’ கதை தன்னுடைய சொந்த கதை என்று உதவி இயக்குனர் செல்வா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கு தொடர்ந்த செல்வா அந்த வழக்கை திரும்ப பெற்றார். இதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது.ஆனால் பட தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோர்ட்டில் வாதாடி அதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது போல செய்தி தரப்பட்டது.

எனவே இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட செல்வா,...அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு, நெறய வாக்குவாதம் அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல !! அவங்க சொன்னதெல்லாம் "copy right கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க" அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க, செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு , அவங்களும் இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான் நாமளும் ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல withdraw pettition file பண்ண !! அதுக்கு judge அத accept பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க !! இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் file பண்ண போற, ஆனா இதுக்கு நடுவுல Ags தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க , அதுல உண்மையாவே எனக்கு என்ன புரியலன்னா நான் widhdraw pettition file பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனத, அவங்க என்னமோ வாதாடி ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ் வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க !! 

நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் !! நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு அமைதியா இருந்த, இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க !! 
இப்படிக்கு 
K. P. செல்வா...என்று பதிவிட்டிருக்கிறார் அவர்.