நடிகை அசின், தனது பத்துமாத  மகள் அரின் மற்றும் கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிவருகின்றன. அப்படங்களை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். தனது பூர்விகமான கேரளாவின் பாரம்பர்யத்தை மறக்காமல் மகளுக்கு ஓணம் பண்டிகை உடை உடுத்தி மகிழ்ந்ததை வலைதளவாசிகள் பாராட்டி மகிழ்கின்றனர்.

தமிழில், ’உள்ளம் கேட்குமே’, ’எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ’கஜினி’, ’மஜா, ’சிவகாசி, காவலன்’ உட்பட பல படங்களில் நடித்தவர் அசின். விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்த இவர்,கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். ஆமிர்கானுடன் இந்தப் படத்தில் நடித்த அசினுக்கு இந்தி வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன. சல்மான் கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் உட்பட முன்னணி இந்தி ஹீரோக்களுடன் அங்கும் நடித்து வந்தார்.அக்‌ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2’ படத்தில் நடித்தபோது, அக்‌ஷயின் நண்பரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் அசினுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியதையடுத்து இவரும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின் அசின் நடிப்பதை  முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அரின் என்று பெயரிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அசின் தனது மகள் அரின் மற்றும் கணவர் ராகுல் சர்மாவுடன் நேற்று கொண்டாடினார்.இந்நிலையில் கேரள பாரம்பரிய உடை அணிந்து, மகளின் முதல் ஓணத்தைக் கடந்த வருடம் கொண்டாடிய புகைப்படத்தை அவர், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மலரும் நினைவுகள்: கடந்த வருடம் பெற்றோர்களாக முதல் ஓணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவரான அசின் தற்போது டெல்லியில் முழுமையாக செட்டில் ஆகிவிட்டார்.