தல அஜித் நடித்துள்ள விவேகம் இன்று வெளியாகும் நிலையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் நாளே விவேகம் படத்தை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவேகம்.

இந்தப் படம் உலகெங்கும் இன்று முதல் கோலாகலமாக வெளியாவதால் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர்.

திரையரங்குகளில் டிக்கெட்டுகள் ரூ.1500-க்கு விற்றாலும் ரசிகர்கள் அதனை வாங்குகின்றனர். இதனால் ஞாயிறு வரை எந்த திரையரங்குகளிலும் டிக்கெட் இல்லை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் சூறாவளி அஸ்வின் ரவிச்சந்திரன், “சென்னையில் பெரும் கூட்டத்திற்கு இடையில் விவேகம் படத்தை திரையரங்கில் பார்க்க இருக்கிறேன். விவேகம் படம் வெளியாவதால் அஜித் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய நாளாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.