சீரியலில் நடித்துக் கொண்டே சிபிஎஸ்சி தேர்வில் 93 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார், இந்தி தொலைக்காட்சி நடிகை அஷ்னூர் கவுர்.  

இந்தி தொலைக்காட்சியில் மிகச் சிறிய வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஷ்னூர் கவுர் 'ஜான்சி ராணி', 'சிஐடி' , 'மஹாபாரதம்' உள்ளிட்ட  பல சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில்  நடித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பள்ளிப் படிப்பையும் எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து வருகிறார்.  இவர் கடந்த ஆண்டு நடந்த முடிந்த சிபிஎஸ்சி தேர்வில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி  இருந்த நிலையில், இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் நடிகை அஷ்னூர் கவுர் 93 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில்... "தேர்வு நேரத்தின்போது தொடர்ந்து  படப்பிடிப்புகள் இருந்தது. அதனால் நடித்து முடித்து விட்டு மேக்கப் ரூம், காரில் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது, நள்ளிரவு, விடிய காலை என மிகவும் கடினமாக தூக்கமின்றி படித்தேன்.

சினிமாவில் நடிப்பவர்கள், அதிகம் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்கிற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. அதனை முறியடிக்கும் விதமாக தான் தொடர்ந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். பல்வேறு கஷ்டங்களை கடந்து, சாதனை படைத்துள்ள அஷ்னூர் கவுருக்குக் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.