தமிழ்நாட்டையே வியக்க வைக்கும் வகையில் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஓன்று சேர்ந்து அறவழியில் அமைதியாக போராடி ஜல்லிக்கட்டு மீதான தடையை விலகச்செய்தது உலகத்தையே வியப்படைய வைத்தனர்.
தற்போது ஜல்லிக்கட்டோடு சேர்த்து வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோலா போன்றவற்றிற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதனால் ஓரு கல்லூரி இனி கேன்டீனில் குளிர்பானங்கள் விற்கப்போவதில்லை, பிரெஷ் ஜூஸ் தான் விற்போம் என ஒரு சிலர் கூறியுள்ளனர். இது மேலும் பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இதை பார்த்த ஆர்யா "அப்படியே வெளிநாட்டு மதுபானங்களை கூட பிரெஷ் ஜூஸ் மூலம் மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும்" என சர்ச்சையான கருத்தை ட்விட்டரில் கூறினார்.
இந்த கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல சிலர் மாணவர்கள் என்ன குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பலர் ஆர்யா மீது கொலைவெறியில் இருப்பதாக கூறப்படுகிறது.
