நடிகர் ஆர்யா 35 வயதை கடந்த பின்னும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஃப்ளே பாய்யாக சுற்றி வந்தவர். தற்போது பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பெண் தேடுகிறார் என்பதை விட பெண்ணை தேர்வு செய்து வருகிறார் என்று சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவு படுத்தும் வகையில் உள்ளதாக கூறி மகளிர் அமைப்பை சேர்ந்த பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்யாவின்  'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில், இலங்கையில் இருந்து கலந்துக்கொண்ட சுசான என்கிற பெண்ணுடன் இவர் ஊர் சுற்றி வருவதாகவும், அதற்கு ஆதாரமாக இருவரும் இலங்கையில் இருப்பது போல் புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

மேலும் இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பது போல் கூட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இலங்கை ஜப்னாவில் உள்ள அனலை தீவு பகுதிக்கு இவர் சென்றதாக ரசிகர்கள் கூறியது மட்டுமில்லாமல், ஒரு சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளது.

இதனால் ஆர்யா சுசானவை தான் திருமணம் செய்துக்கொள்ள உள்ளாரா என்கிற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. சுசான ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அதே போல் இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.