arya help the actor ajayrathnam
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் அஜெய்ரத்தினம். இவர் நடிப்பை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். மேலும் விளையாட்டின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேட்மிட்டன் அகாடமி ஒன்றை துவங்கியுள்ளார். இந்த அகடமியை நடிகர் ஆர்யா கலந்துக்கொண்டு திறந்து வைத்தார்.
சமீப காலமாக சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித். மேலும் ஆர்யாவும் கால்பந்து உற்பட பல விளையாட்டுகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். 
இந்நிலையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார்.
அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.
