ஆர்யாவின் மணப்பெண் தேடும் நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கடைசியில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சி  இருக்கும் நிலையில்,இலங்கை பெண் சுசானாவை திருமணம் செய்துக் கொள்வாரா அல்லது  அகாதாவா..? அல்லது சீதாலட்சுமியா? என பலரும் எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக,ஆர்யா யாரை திருமணம் செய்துக்கொள்ள  போகிறார் என்பது இன்று தெரியவரும்.

மேலும்,யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வரும் சேர்ந்து   வாழ வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார் நடிகர் ஆர்யா.

மேலும்,இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரையில் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உள்ளது என்றே கூறலாம்.

முன்பொரு காலத்தில், ஒரு பெண்ணை  மணக்க வேண்டும் என்றால்,ஆண்கள தான்  தங்களுடைய  வீரத்தை நிரூபித்து விட்டு,பெண்ணை  மணம்  முடிக்க செய்வர்

ஆனால் தற்போது ,டிவி நிகழ்ச்சி மூலமாக,16  பெண்கள் ஒரு ஆண் மகனுக்காக  போட்டி போட்டு  உள்ளனர் என்றால் சற்று வியப்பாகவும்....அதே  வேளையில் பெண்களை இழிவு படுத்தும் விதமாகவும் உள்ளது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்று தெரிந்து விடும் நடிகர் ஆர்யா யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்று.....

இதெல்லாம் மீறி தற்போது நடைப்பெற உள்ள  திருமணத்தில்,யாரை  மணந்தாலும்  இரண்டு வருடம் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், எந்த காரணத்தை  கொண்டும் விவாகரத்து வாங்க  கூடாது  என  ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாம்...