- Home
- Cinema
- அடேங்கப்பா... டிசம்பர் 19-ந் தேதி ஓடிடியில் இத்தனை படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகுதா?
அடேங்கப்பா... டிசம்பர் 19-ந் தேதி ஓடிடியில் இத்தனை படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகுதா?
டிசம்பர் 19ந் தேதி, நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற முக்கிய ஓடிடி தளங்களில் புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அதன் முழு விவரங்களைக் காணலாம்.

ஜீ5 ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்
ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஒரு பெண்ணின் பர்ஸ் வழக்கைத் விசாரிக்க, கொலைகள் மற்றும் காணாமல் போனவர்களின் ரகசியங்கள் வெளிவரும் மலையாள மிஸ்டரி த்ரில்லர். இப்படம் டிசம்பர் 19ந் தேதி ஜீ 5 ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
காட்டே காட்டே சா 2
பஞ்சாபி கிராமத்தில் பெண்கள் திருமண விழாக்களைக் கையில் எடுப்பதால் ஆண்களுக்குள் நடக்கும் நகைச்சுவைப் போராட்டமே இந்த காமெடி டிராமா. இதுவும் ஜீ 5-ல் டிசம்பர் 19 அன்று வெளியாக உள்ளது.
ஹார்ட்லி பேட்டரி
காதலை அறிவியல் பூர்வமாக அளவிட முயலும் விஞ்ஞானியின் வாழ்வில் காதல் நுழையும் தமிழ் ரொமான்டிக் சயின்ஸ் ஃபிக்ஷன் வெப் சீரிஸ். இந்த வெப் தொடர் டிசம்பர் 16 முதல் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
நயனம்
ஏழைகளுக்கு இலவச கண் மருத்துவமனை நடத்தும் மருத்துவரின் ரகசிய சோதனைகளால் ஏற்படும் சைக்கலாஜிக்கல் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர். இது ஜீ 5 ஓடிடியில் டிசம்பர் 19 முதல் வெளியாகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார்
மிஸஸ் தேஷ்பாண்டே
ஒரு தொடர் கொலையாளியைப் பிடிக்க, போலீஸ் அவளது உதவியை நாடும் நிலை. தாய்-மகனுக்கு இடையேயான சிக்கலான உணர்வுகளே கதை. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் டிசம்பர் 19ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஃபார்மா
மருந்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஆபத்தான மருந்துகளால் நோயாளிகள் இறப்பதை மையமாகக் கொண்ட மலையாள சோஷியல் த்ரில்லர். ஜியோ ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
நெட்ஃப்ளிக்ஸ்
ஏக் தீவானே கி தீவானியத்
அரசியல்வாதியின் மகன் மற்றும் ஒரு நடிகைக்கு இடையேயான நச்சுத்தனமான காதல் கதையைக் கொண்ட இந்தி ரொமான்ஸ் டிராமா. இது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் 16ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
எமிலி இன் பாரிஸ் சீசன் 5
ரோமிலிருந்து பாரிஸ் வரையிலான எமிலியின் பயணத்தில் தொழில், காதல், நட்பு ஆகியவற்றில் ஏற்படும் மோதல்கள். நெட்ஃப்ளிக்ஸில் டிசம்பர் 18 முதல் வெளியாகிறது.
பிரேமண்டே
திருமணத்திற்குப் பிறகு கணவன் ஒரு குற்றவாளி என்ற உண்மை தெரியவர, தம்பதியரின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களே இந்த தெலுங்கு கிரைம் த்ரில்லர். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ்
இன்ஸ்பெக்டர் ஜடில் யாதவ் மற்றொரு பரபரப்பான கொலை வழக்கை விசாரிக்கும் கிரைம் த்ரில்லர். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 19 முதல் வெளியாகிறது.
பிரைம் வீடியோ
ஃபால் அவுட் சீசன் 2
அணு ஆயுத அழிவுக்குப் பிறகு மோஜாவே பாலைவனத்தில் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் அரசியல் சதித்திட்டங்களைக் கொண்ட சர்வதேச சூப்பர்ஹிட் சீரிஸ். டிசம்பர் 17 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 4
நான்கு நண்பர்களின் வாழ்க்கையின் இறுதி அத்தியாயமாக வரும் உணர்ச்சிகரமான ஃபைனல் சீசன். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் டிசம்பர் 19 முதல் வெளியாகிறது.
தம்மா
ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தம்மா' ஒரு ஹாரர் காமெடிப் படம். தற்போது பிரைம் வீடியோவில் வாடகைக்குக் கிடைக்கும் இப்படம், 16 ஆம் தேதி முதல் இலவசமாகக் கிடைக்கும்.
ராஜு வெட்ஸ் ராம்பாய்
சிறிய படமாக வெளியாகி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய 'ராஜு வெட்ஸ் ராம்பாய்' டிசம்பர் 18 அன்று ஈடிவி வின் தளத்தில் வெளியாகிறது.
உன் பார்வையில்
கபிர் லால் இயக்கத்தில் பார்வதி நாயர், கணேஷ் வெங்கட்ராமன், மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள உன் பார்வையில் திரைப்படம் வருகிற டிசம்பர் 19-ந் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

