- Home
- Cinema
- பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்மீது புகார் கொடுத்த சினிமா தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் என்ன தெரிவித்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

Mahesh Ramya Statement About Savukku Shankar Arrest
சவுக்கு சங்கர் கைது குறித்து சினிமா தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நான் Red & Follow திரைப்படத்தின் தயாரிப்பாளர். நான் கொடுத்த புகாரின் பேரில் நேற்று சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதன் விபரம் நான் அவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட போது தவறுதலாக அவர் பதிவிட்ட என் படம் சம்மந்தமான விஷயங்களை நீக்க கோரிய போது ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி அலுவலகத்திற்கு வரச்சொன்னார்.
30.06.2025 அன்று நான் அவரது அலுவலகத்திற்கு சென்ற போது மீண்டும் என்னுடைய படத்தை பற்றி தரக்குறைவாக பேசாமல் இருக்க எனக்கு ரூபாய் 10 லட்சம் கொடு இல்லையென்றால் உன்னுடைய படம் வெளிவராமல் இருக்க நான் வீடியோ வெளியிடுவேன் என்று என்னை பயமுறுத்தினார். நான் அதன்பிறகு என்னுடைய கையில் ரூ.1 லட்சம் தான் உள்ளது என்று கூறினேன். அதற்கு நான் என்ன பிச்சைக்காரனா என்று கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி உயிர்நாடியில் எட்டி உதைத்தார்.
தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா அறிக்கை
அவர் மட்டுமில்லாமல் அவரது டீமில் உள்ள மாலதியும், அடையாளம் காட்டக்கூடிய நான்கு நபர்களும் என்னையும், என்னுடைய படத்தின் இயக்குநரையும் அடித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அங்கிருந்து தப்பித்தோம் என்று நாங்கள் இருவரும் வெளியே வந்த பிறகு இயக்குனர் அவர்கள் என்னை சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்ற பின்பு மறுநாள் நான் ஜூலை 1ம் தேதியில் நான் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்தனர்.
தற்போது பத்திரிகை செய்திகளில் தவறுதலாக என்னுடைய பெயரை புருஷோத்தமன் என்று வெளியிடுகின்றனர். ஆனால் புருஷோத்தமன் என்பது என்னுடைய அப்பாவின் பெயர் (என்னுடைய பெயர் மகேஷ்) மகேஷ் ரம்யா என்பது என்னுடைய மனைவியின் பெயரையும் இணைத்து படம் தயாரிப்பு செய்துள்ளேன். தற்போது செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் தவறுதலாக ரூ.2 லட்சம் பிடிங்கி கொண்டார்கள் என்று செய்தி வருகிறது. அது முற்றிலும் தவறான செய்தியாகும். ஏனென்றால் அன்று சவுக்கு சங்கர் கைதின் போது வெளியிட்ட வீடியோவில் படித்த விவரத்தின் அடிப்படையில் என்னுடைய அப்பா பெயரையும், 2 லட்சம் பிடிங்கி கொண்டேன் என்று சவுக்கு சங்கர் அவர்களே அந்த வீடியோவில் தவறான செய்தியை பரப்பினார். நான் மற்றும் எனது இயக்குனர் இருவரும் அவரது அலுவலகத்திற்கே வரவே இல்லை என்றும் பொய்யான தகவலை கைதின் போது வெளியிட்டார்.
இதில் ஆயிஷா சாதிக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தான் கைது செய்ததாகவும், தவறுதலான செய்திகளையும் சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தவறான செய்திகளை ஊடகங்களிருந்து நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதில் ஆயிஷா சாதிக் என்பவர் இயக்குனர் வணக்கம் தமிழா சாதிக் அவர்களின் மனைவி ஆவார். அவரும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளார். இது தான் உண்மையான தகவல். எனவே பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று இந்த கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இதன் உண்மை நிலையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

