‘எனிமி’ பட ரிலீஸ் எப்போது?... விஷால் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஆர்யாவை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். ஹீரோ இவராக இருந்தாலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யா இவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்திருந்தார் என ரசிகர்கள் கூறினர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த வண்ணம் உள்ளன.
தன்னுடைய உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட், விஷால் - ஆர்யா மீண்டும் ஒன்றிணைவது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'எனிமி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஷால் மற்றும் ஆர்யா ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருந்தனர்.
ஆர்யாவை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். ஹீரோ இவராக இருந்தாலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யா இவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்திருந்தார் என ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை விஷால் வெளியிட்டுள்ளார். அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு படத்தை திரையிட உள்ளதாக புது போஸ்டர் ஒன்றுடன் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.