பிரபல நடிகர் ஆர்யாவிற்கும், நடிகை சயிஷாவிற்கும் இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஓரிரு மாதங்களாகவே நடிகர் ஆர்யா, மற்றும் நடிகை சாயிஷா இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் இருவருமே தங்களுடைய காதல் குறித்து வெளிப்படுத்தவில்லை. பின் நடிகர் ஆர்யா, காதலர் தினத்தன்று, சயிஷாவுடன் உண்டான காதலை உறுதி செய்ததோடு, மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார்.

அதன்படி இவர்களுடைய திருமணம் இன்று ஹைதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் தமிழ், இந்தி, திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் தற்போது இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஆர்யா இல்லை என்றாலும், மணப்பெண் சயிஷா, தேவதை போல பிங்க் கலர் லெஹங்காவில் மின்னுகிறார். 

அதே போல் குடும்பத்தினருடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் சஞ்சய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

அந்த புகைப்படங்கள் இதோ: