தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திர ஜோடிகள் ஆர்யா மற்றும் சயிஷா தம்பதி. ஆர்யா யாரை திருமணம் செய்து கொள்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என காதலர் தினத்தன்று சயிஷாவை காதலிப்பதாகவும், மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறி ஷாக் கொடுத்தார் ஆர்யா.

ஆர்யா கூறியது போல் இருவருக்கும், கடந்த மாதம் ஹைதராபாத்தில் வெகு விமர்சியாக திருமணம் நடைபெற்றது. ஆனால் அவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரை காண முடியவில்லை என்பது ரசிகர்களின் பெரிய ஏக்கம் என கூறலாம். 

திருமணத்திற்கு பின் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். பின் ஆர்யா - சயிஷா ஜோடி, படப்பிடிப்பு அனைத்தையும் ஓரம் கட்டி வைத்து விட்டு, ஹனிமூனுக்காக வெளிநாடு பறந்தனர். இது குறித்த ஒரு புகைப்படத்தை நடிகை சாயிஷா வெளியிட அது வைரலாக பரவியது.

ஆனால் இவர்கள் ஒன்றாக இருப்பது போல் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.   இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஆர்யா கழுத்தில் மாலையுடன் இருக்கிறார்.சாயிஷா புடவை கட்டி கொண்டு குடும்ப குத்து விளக்காக இருக்கிறார். இதுவும் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது.