"தடையற தாக்க", "தடம்", "மீகாமன்" போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது ரியல் ஜோடியான காதல் மனைவி, சாயிஷா நடித்துள்ளார். 

"மகாமுனி" படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ஆர்யாவைப் பார்த்து, ஆகா நம்ம ஆளு திரும்ப வந்துட்டாரு என ரசிகர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு அசத்தியிருந்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் "நாய்கள் ஜாக்கிரதை", "டிக்டிக்டிக்", "மிருதன்" போன்ற படங்களை இயக்கிய சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் "டெடி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால், சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். 

"தடையற தாக்க", "தடம்", "மீகாமன்" போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது ரியல் ஜோடியான காதல் மனைவி, சாயிஷா நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் அந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். மகாமுனி படத்திற்கு பிறகு ஆர்யா நடிக்க உள்ள படம் என்பதாலும், மிருதன் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கிய சக்தி செளந்தரராஜன் உடன் கூட்டணி அமைத்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Scroll to load tweet…

இந்நிலையில் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் உடன் ஆர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.