Yaanai : நெருங்கும் ரிலீஸ் தேதி... யானை படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கிய அருண் விஜய்
Yaanai : ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள யானை படம் ஜூன் 17-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனரான வலம் வருபவர் ஹரி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சாமி 2 திரைப்படம் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்த ஹரி அவர் நடிக்க இருந்த 'அருவா' படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் சூர்யாவுக்கும் இயக்குனர் ஹரிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அப்படைத்தை கைவிட்டனர்.
இதையடுத்து 3 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்த இயக்குனர் ஹரி, பின்னர் தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனான அருண் விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்தார். தற்போது இவர்கள் கூட்டணியில் யானை என்கிற ஆக்ஷன் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா, புகழ், யோகிபாபு, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
யானை படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் படம் ஒன்று ரிலீஸுக்கு முன்பே வியாபாரம் ஆவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யானை படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற ஜூன் 30-ந் தேதி மாலை 6 மணிக்கு யானை படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அன்றைய தினமே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பேய் பயத்தை காட்டப்போகும் இரண்டு GV-க்கள்... மீண்டும் ஹாரர் ரூட்டில் ஜிவி பிரகாஷ் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்