பிரபாஸுடன் “சாகோ” படத்தில், நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளார்.

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படம் “சாகோ”. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.

இந்தப் படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடுகிறது.

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ், பிரபாஸுக்கு வில்லனாக இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், அருண் விஜய்யும் இந்தப் படத்தில் பிரபாஸுடன் இணைந்துள்ளார். அவர் வில்லனாக நடிக்கிறாரா? அல்லது வேறு என்ன கதாபாத்திரம் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும். விரைவில் அருண் விஜய் சாகோ படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அதன்பின்னே நமக்கு அவரது கதாபாத்திரத்தை பற்றி தெரிய வரும்.

தற்போது அருண்விஜய், மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.