arthi and kanjakarupu scolding barani
நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஆர்த்தி, கஞ்சா கருப்பு, ஜூலி, மற்றும் பரணி ஆகியோர் பாகுபலி படத்தின் சிறு காட்சியை எடுத்துக்கொண்டு அதனை காமெடியாக நடித்து காட்டினர்.
இதில் ஆர்த்தி, கஞ்சா கருப்பு என இருவருமே தங்களுடைய வசனத்தை திக்கி திக்கி தான் கூறினார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். இவர்களே ஒழுங்காக நடிக்காத போது இவர்கள் பரணியை எப்படி எல்லாம் குறை சொன்னார்கள் என்பதை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் முடிந்த சில நிமிடங்களில் கஞ்சா கருப்பு பெண்கள் இருக்கும் அறைக்கு வந்தார். வந்ததுமே இவனுக்கு பதிலா வேற யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம் என கூறினார். உடனே ஆர்த்தி நானும் சொன்னேன், தனிப்படையாக உனக்கு இருக்கும் கோபத்தை இதில் காட்டாதே என கூறியதாகவும்.
பரணி வேண்டும் என்றே இப்படி நடித்ததாகவும் இருவரும் மாறி மாறி அவரை திட்டினர். கஞ்சா கருப்பு நாலு வார்த்தையை அவனால சரியா பேச முடியல பின் எப்படி சினிமாவுல பேசுவான் என கூற, அதற்கு ஜூலி நான் இப்படி பேசுனா காமெடியாக இருக்கும் என கூறி இதை செய்ததாக தெரிவித்தார்.
ஆனால் இவர்கள் எவ்வளவு பேசினாலும் திரும்பி பேசாமல், பாவமான முகத்தோடு அமர்ந்திருந்தார் பரணி. இதில் என்ன ஹைலைட் காமெடி என்றால், இவர்கள் இருவருமே சரியாக நடிக்காமல் மேடையில் திக்கி திக்கி பேசிய நிலையில் இவர்கள் பரணியை குறை கூறி வருகின்றனர்.
