பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆர்த்தி பேசுகையில் எல்லாரிடமும் நன்றாக பேசும் ஆரவ் மற்றும் கவிஞர் சினேகன் இருவரும் ஏன் இப்போது அதிகமாக பேசுவது இல்லை என்பது போல் சொல்கிறார்.

இதற்கு ஜூலி ஆமாம் முன்பு இருந்த ஒரு சந்தோஷம் தற்போது இந்த வீட்டில் இல்லை என்று கூறுகிறார். மற்ற போட்டியாளர்கள், வெளியில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது என ஜூலியிடமும் ஆர்த்தியிடமும் கேட்டனர்.

அதற்கு ஜூலி உலக நாயகன் கமலஹாசன் கொஞ்சம் பரிசுகள் கொடுத்தார், மக்கள் நிறைய கொடுத்தார்கள் என கூறினார். இதனை தொடர்ந்து ஆர்த்தியும் நானும் தனக்கு இவ்வளவு பரிசுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என மிகவும் பாவமாக கூறினார்.